அதிக ஒலியுடன் டிரைவ்; மடக்கிய போலீஸ் : ஜெய் அட்வைஸ்

நடிகர் ஜெய் அடிக்கடி டிராபிக் போலீஸிடம் சிக்கி வருகிறார். கடந்தாண்டு குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி, பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இந்நிலையில், நேற்று இரவு சென்னை, நுங்கம்பாக்கம் சாலையில் அதிக ஒலியுடன் கார் ஒன்று வேகமாக சென்றது. அந்தகாரை டிராபிக் போலீசார் தடுத்து நிறுத்தினர். காரின் உள்ளே ஜெய் இருந்தார். இதுபோன்று அதிக ஒலி எழுப்பும் காரை பயன்படுத்தக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து ஜெய், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

அதோடு, இனி இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் காரில் வராதீர்கள் என ஜெய்யை கொண்டே போலீசார் அறிவுரை வழங்கும்படியான வீடியோ ஒன்றும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் ஜெய் கூறியிருப்பதாவது… இது எனது கார் தான். இந்த காரில் அதிக ஒலி வருகிறது. இதுபோன்ற வாகனத்தை பயன்படுத்தினால் போலீசார் அதை பறிமுதல் செய்வார்கள். எனவே அதிக ஒலி எழுப்பும் காரை யாரும் பயன்படுத்த வேண்டாம். அதிக சத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள் என கூறியுள்ளார்.

Sharing is caring!