அதிக சப்தத்துடன் கார் ஓட்டிய நடிகர் ஜெய்… போலீசார் எடுத்த வித்தியாசமான நடவடிக்கை

சென்னை:
வேண்டாம்.. அதிக இரைச்சலுடன் கார் ஓட்டாதீங்க… போலீசாரின் வித்தியாசமான நடவடிக்கை.

அதிக இரைச்சலுடன் காரை ஓட்டிய நடிகர் ஜெய்க்கு, சென்னை போலீசார் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர்.
மது அருந்திவிட்டு காரை செலுத்தி போலீசாரிடம் சிக்கியவர் நடிகர் ஜெய்.

சமீபத்தில் மது போதையில் அடையாற்றில் தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றம் வரை அவர் செல்ல நேரிட்டது. இந்நிலையி பெரிய மேட்டில் தனது காரை அதிக இரைச்சலுடன் அவர் ஓட்டி சென்றுள்ளார் நடிகர் ஜெய்.

அவரை தடுத்தி நிறுத்திய போலீசார், அருகில் மருத்துவமனை உட்பட மக்கள் கூடும் இடங்கள் இருக்கிறது. எனவே அவர்கள் பாதிப்படைவார்கள். பிரபலமான நடிகராக இருந்து கொண்டு நீங்களே இப்படி செய்யலாமா என அவருக்கு அறிவுரை கூறினர்.

இதையடுத்து போலீசாரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஜெய், அதற்காக வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து அவரை வைத்து ஒரு விழிப்புணர்வு வீடியோவையும் போலீசார் எடுத்துள்ளனர்.

அதில் ‘இது என்னுடைய கார்தான். இதுபோல் அதிக இரைச்சலுடன் காரை ஓட்டினால் உங்கள் காரை போலீசார் சீஸ் செய்வார்கள். எனவே, அதிக சப்தத்தை உருவாக்கும் கருவியை காரிலிருந்து எடுத்து விடுங்கள். இது பொதுமக்களுக்கு தொல்லையை கொடுக்கும். இதுபோல் செய்ய வேண்டாம். இது எனது தாழ்மையான கருத்து” என ஜெய்யை போலீசார் பேச வைத்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!