அதிமுகவில் இணைந்தார் நடிகர் ரவிமரியா

சென்னை:
இயக்குனர், வில்லன் நடிகர், காமெடியன் என்று கோலிவுட்டை கலக்கி வரும் நடிகர் ரவி மரியா.

இவர் இயக்குனராக இருந்து பின்னர் நடிகரானார். தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹார ஹர மஹாதேவகி முதல் சமீபத்தில் வெளிவந்த சார்லி சாப்ளின் 2 படம் உட்பட பல படங்களில் அவரின் காமெடி அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் ரவி மரியா தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார். அவர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!