அதிரடி அட்டகாச பஞ்ச் டயலாக்… சர்காரில் இருக்காம்…!

சென்னை:
அதிரடி… அட்டகாச டயலாக் சர்காரில் இருக்கிறது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து தடைகளையும் தாண்டி தீபாவளிக்கு சர்கார் படம் மூலம் சரவெடி வெடிக்க வருகிறார் விஜய். முருகதாஸ் எழுதிய கதை என்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார்.

நேற்றைய விசாரணையில் முருகதாஸ்-வருணுடன் சமரசம் பேசியுள்ளதாக செய்திகள் வந்துவிட்டது. அப்புறம் என்ன தீபாவளிக்கு சர்கார் சரவெடி இருக்கிறது. விஜய் படங்களில் ஏதாவது ஒரு மாஸ் வசனம் இடம்பெறும், ரசிகர்களிடமும் அது வைரலாகும்.

அப்படி சர்கார் படத்திலும் மாஸ் வசனங்கள் நிறைய இருக்கிறது.
அதில் ஒன்று துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய ஐ ம் வெயிட்டிங் என்ற வசனம் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளதாம். இதோடு வேறொரு வைரலாகும் வசனங்களும் இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் வருகின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!