அதிரடி…இயக்குனர் ரஞ்சித் அதிரடி….யாரும் எதிர்பார்கவில்லை???

கபாலி படத்தின் மூலம் வெளியுலகத்துக்கு பரவலாக அறியப்பட்டவர் இயக்குனர் ரஞ்சித். தொடர்ந்து காலா படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். ரஞ்சித் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

அம்பேத்கர் வழியை தீவிரமாக பின்பற்றி வருகிறார். அவர் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்ட பரியேறும் பெருமாள் படம் ஹிட்டானது.

தற்போது அவர் பாலிவுட்டில் ஒரு படம் இயக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படம் ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் என சொல்லலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை கிரிக்கெட் வீரர் தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடர்ந்த வனப்பகுதிகளில் காட்சிகளை படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharing is caring!