அதிரடி சாதனை படைத்த அலாவுதீனின் அற்புத கேமரா டிரைலர்

சென்னை:
அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் டிரைலர் அதிரடி சாதனை செய்துள்ளது.

இப்போதெல்லாம் ஒரு படத்தின் டிஜிட்டல் சாதனை மிக முக்கியமானதாக பேசப்படுகிறது. டீசர், பாடல்கள் வெளியீடு, டிரைலர், ஸ்னீக் பீக் என அனைத்தும் இடம் பெற்று விடுகின்றன.

தற்போது 4K HDR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்த உலகின் உலகின் முதல் டிரைலர் என்ற பெருமை அலாவுதீன் அற்புத கேமிரா படத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த 11ம் தேதி வெளியான இந்த டிரைலர் ஒரு நாளில் 5 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

மூடர் கூடம் நவீன் இயக்கி நடிக்க, கயல் ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளார். சாகச திரில்லர் படமாக இக்கதை ஜெர்மனி, உக்ரைன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!