அதிரடி பதில் கொடுத்த நடிகை வரலட்சுமி

சென்னை:
அதிரடி பதில் கொடுத்து அனைவரது வாயையும் அடைத்து விட்டார் நடிகை வரலட்சுமி.

சர்கார், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்த வரலட்சுமி சமீபத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அதிரடி பதில் தெரிவித்துள்ளார்.

அந்த கேள்வி இதுதாங்க. ஒருவருக்கு கிஸ் கொடுப்பேன், ஒருவரைக் கொலை செய்வேன் மற்றும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என்பது தான்.

அதற்கு அவர் அனைவரும் ஷாக்காகும் வகையில், சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலைக் கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரைத் திருமணம் செய்வேன் என்று அதிரடியாக பதில் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!