‘அத்தரண்டிகி தாரேதி’யில் நதியாவுக்கு பதில் ரம்யாகிருஸ்ணன் பிரதான வேடம்

பவன் கல்யாண் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா, பிரணிதா இருவரும் கதாநாயகிகளாக நடித்த இந்தப் படத்தில் நதியாவுக்கு பிரதான வேடம். பவன்கல்யாணின் அத்தையாக நடித்திருந்தார், மற்றும் பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

சுந்தர். சி இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்க இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்கிறார்கள். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிப்பதாக தகவல் வெளியானது. உண்மையில் அந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று ஜார்ஜியாவில் தொடங்கியது. வரும் 27 ஆம் தேதி வரை அங்கே படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஒரு பாடல்காட்சியும், சேஸிங் காட்சியும் படமாக்கப்படவிருக்கிறது.

Sharing is caring!