அனிருத்தே ரஜினியின் அடுத்த படத்திற்கும் இசை

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகிறது. அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இசையமைப்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ஏ.ஆர்.ரகுமானா? அல்லது ஹாரிஸ் ஜெயராஜா? என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது கிடைத்த தகவல்படி, மீண்டும் பேட்ட படத்தை அடுத்து அனிருத்தே ரஜினியின் அடுத்த படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

Sharing is caring!