அனிருத், இசைக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி

சென்னை:
அனிருத் மற்றும் அவரது இசைக்குழுவினருடன் இணைந்து ரஜினி எடுத்துக் கொண்ட படம் செம வைரலாகி வருகிறது.

சினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி தான் பெறுகிறார்.

அவரின் நீண்ட நாள் கனவு சூப்பர் ஸ்டாருக்கு இசையமைக்க வேண்டும் என்பது தான். அந்த கனவும் பேட்ட படத்தின் மூலம் அவருக்கு நிறைவேறிவிட்டது. அடுத்தடுத்தும் இவர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் அனிருத்தை குஷிப்படுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார். அனிருத் இசைக்குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!