அனிருத் பாடியுள்ள “கண்ணம்மா உன்ன” பாடல் வீடியோ

ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தின் கண்ணாம்மா உன்ன பாடல் வீடியோ, யூடியூப்பில் வெளியாகி உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை புரியாத புதிர் படத்தை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் கண்ணம்மா பாடலை அனிருத் பாடியுள்ளார். முன்னதாக சாம்.சி.எஸ் இசையில் விக்ரம் வேதா படத்தில் இடம் பெற்ற ‘யாஞ்சி யாஞ்சி’ பாடலை அனிருத் பாடி இருந்தார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

அதே போல கண்ணம்மா பாடலும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்நிலையில் இந்த பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

Sharing is caring!