அனி சசி முதன்முதலாக இயக்குனராக, கதாநாயகனாக பிரணவ் மோகன்லால்

மலையாள சினிமாவில் என்பது, தொண்ணூறுகளில் பல ஹிட் படங்களை இணைந்து கொடுத்தவர்கள் தான் நடிகர் மோகன்லாலும், இயக்குனர் ஐ.வி.சசியும். கடந்த வருடம் தான் ஐ.வி.சசி சென்னையில் காலமானார். இவர்களில் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக மாறி நடித்து வருகிறார். ஐ.வி.,சசியின் மகன் அனி சசியோ டைரக்சன் பக்கம் திரும்பி விட்டார்.

அந்தவிதமாக அனி சசி முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக பிரணவ் மோகன்லால் நடிக்க உள்ளார். கடந்த 1975ல் மோகன்லாலின் படத்தை இயக்கியதன் மூலம் தான் ஐ.வி.சசியும் இயக்குனராக அறிமுகமானார் என்பது இதில் ஆச்சர்யமான சிறப்பம்சம்.

தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ள ‘அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்திற்கு அனி சசி தான் கதை எழுதியுள்ளார் என்பதும், அந்தப்படத்தில் பிரணவ் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!