அனுராக் பாசு இயக்கும் படத்தில் இருந்து விலகினார் டாப்சி

மும்பை:
அனுராக் பாசு இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளார் நடிகை டாப்சி.

டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் இணைந்து இருந்த அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.

டாப்சி, ராஜ்குமார் ராவ், பாத்திமா சனா சாகித், ஆதித்யா ராய் கபூர், அபிஷேக் பச்சன் எனப் பெரிய நட்சத்திர கூட்டணியை உருவாக்கி அனுராக் பாசு புதிய படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் நடிக்க டாப்சி எந்தத் தேதிகளில் தனது கால்ஷீட் வேண்டும் எனப் படக்குழுவிடம் கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்காததால் படத்திலிருந்து விலகியுள்ளார். டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மன்மஸ்ரியான், முல்க் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாகின.

இந்தாண்டு இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. அவர் நடித்துள்ள தாட்கா, பாடியா ஆகிய இந்திப்படங்களின் படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கில் நடித்த கேம் ஓவர் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது.

இதுதவிர துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் புதிய படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்சி நடிக்க உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

Sharing is caring!