அனைத்து வதந்தியிலும் இலியானா மறைக்காத உண்மை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரேவ் என்பவரை காதலித்து வரும் இலியானா, அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால், அது அனைத்துமே வதந்தி என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் இலியானா. ஆனபோதும் ஆண்ட்ரேவை காதலிப்பதை மட்டும் அவர் மறுக்கவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் வெளிநாட்டு நபரை காதலிப்பது ஏன்? என்று இலியானாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கொடுத்துள்ளார். அது என்னவென்றால், அவர் மீது எனக்கு காதல் வருவதற்கு முதல் காரணம் அவரது நல்ல இதயம் தான். கேரக்டர் ரீதியாக என்னை அவர் கவர்ந்தார். காதலிப்பதற்கு தேசியம் மற்றும் நிறம் தேவையில்லை என்று கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் இலியானா.

Sharing is caring!