அன்புக்காகவும், உற்சாகத்திற்காகவும் எழுதிய வரிகளே அன்றி, அந்த வரிகளை விஸ்வாசம் படத்தில் நான் எழுதவில்லை

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது படமான விஸ்வாசம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திலும் அஜித்திற்கு ஒரு அதிரடியான ஓப்பனிங் பாடல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தநேரத்தில், எத்தனை உயரம் இமயமலை, அதில் இன்னொரு சிகரம் எங்க தல – என்று தொடங்கும் ஒரு பாடல் வரி இணையதளத்தில் அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் அருண்பாரதி எழுதிய இந்த பாடல் தான் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த தகவலை பாடலாசிரியர் அருண்பாரதி மறுத்துள்ளார். அவர், டுவிட்டரில் கூறியதாவது, “வணக்கம். என் மனதில் மரியாதைக்குரியவராய் நிற்கும் அஜித் ரசிகர்களின் அன்புக்காகவும், உற்சாகத்திற்காகவும் எழுதிய வரிகளே அன்றி, அந்த வரிகளை விஸ்வாசம் படத்தில் நான் எழுதவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.

Sharing is caring!