அபிராமி ஹீரோயின் ஆகிறார்

சமீபகாலமாக அதிகமான படங்களில் தங்கை, மகள் கேரக்டரில் நடித்து வருகிறவர் அபிராமி. இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழுவில் சவுண்ட் என்ஜினீயராக பணிபுரியும் ஆர்.கே.சுந்தரின் மகள். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அறிமுகமான அபிராமி. துப்பாக்கி முனை படத்திலும், ராட்சன் படத்திலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சிறுமியாக நடித்திருந்தார்.

என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்தார். தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கும் யார் இவர்கள் படத்தில் அஜய் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து ஒரு படத்தில் ஹீரோயின் ஆகிறார். நந்தா படத்தில் அறிமுகமாகி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த வினோத் கிஷன் ஜோடியாக நடிக்கிறார். படம் பற்றிய விபரங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.

Sharing is caring!