அப்டேட் கேட்ட சூர்யா ரசிகர்களை கிண்டல் செய்துள்ள தயாரிப்பாளர்

சென்னை:
அப்டேட்… அப்டேட் என்று கேட்டு தொல்லை படுத்தி வந்த சூர்யா ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக என்ஜிகே படத்தின் தயாரிப்பாளர் ஒரு மீம் வெளியிட்டுள்ளார்.

நீண்ட நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த என்ஜிகே படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் சமீபத்தில் தான் துவங்கியது. மேலும் பாடல்கள் சோனி நிறுவனம் வாங்கியிருப்பதாக அப்டேட்டும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சூர்யா ரசிகர்கள் அப்டேட்டுக்கு முன்பு எப்படி நடந்துகொண்டனர் என விமர்சிக்கும் வகையும் ஒரு மீம் பதிவிட்டுள்ளார்.

மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு காலையில் தன் பெற்றோர் காலில் விழுந்து வணங்கிவிட்டு, மாலை குடித்து விட்டு வந்து அடிப்பது போன்ற காட்சியை சித்தரித்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!