அப்பாவானார் பரத்…அதுவும் இரட்டை குழந்தைக்கு…

பாய்ஸ் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், தனி ஹீரோவாக காதல் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் பரத். தற்போது பொட்டு, சிம்பா, காளிதாஸ், 8 ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் துபாயை சேர்ந்த ஜெஸ்லி ஜோஸ்வா என்ற மலையாள பல் மருத்துவரை கடந்த 2013-ல் காதலித்து  திருமணம்  செய்துக் கொண்டார்.

கர்ப்பமாக இருந்த ஜெஸ்லிக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகர் ஷாம் உள்ளிட்ட நண்பர்களுடன் டயப்பர் அணிந்து ஃபோட்டோவுக்கு போஸும் கொடுத்திருந்தார் பரத். இந்நிலையில் நேற்று ஜெஸ்லிக்கு டெலிவரி ஆகியிருக்கிறது.

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியிருக்கிறார்கள் பரத்தும் ஜெஸ்லியும். இவர்களுக்கு தற்போது பிரபலங்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

Sharing is caring!