அப்பேட் கேட்ட ரசிகர்களுக்கு கோபமாக பதில் அளித்த செல்வராகவன்

சென்னை:
அப்டேட் பற்றி கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு கோபமாக பதில் சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வராகவன். இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் துவங்கப்பட்ட என்ஜிகே படம் அப்படியே நிற்கிறது. சூர்யா தன் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார். இந்நிலையில் என்ஜிகே படத்தின் அப்டேட் கொடுங்கள் என தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் படக்குழுவினரை கேட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு இயக்குனர் செல்வராகவன் கோபமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “அப்டேட் வரும்போது வரும். மூன்று நாளுக்கு ஒரு முறை அப்டேட் விட முடியாது. நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நாங்கள் இலக்கை நோக்கி கடினமாக உழைக்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பதில் சூர்யா ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!