அமலாபால் நடிக்கும் படித்தில் இணைந்த ஐபிஎல் வர்ணனையாளர்

சென்னை:
அமலாபால் நடிக்கும் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளரும் சேர்ந்துள்ளார்.

அமலாபால் நடித்து வரும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் பிரபல ஐபிஎல் வர்ணனையாளர் சமீர் கோச்சார் நடித்து வருகிறார்.
கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறியாதவர்கள் யாரும்ட இருக்க முடியாது.

குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர் இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்போது நெட் பிலிக்ஸ் வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமலா பால் நடித்து வரும் “அதோ அந்த பறவை போல” படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!