அமலா பாலுக்கு பாராட்டு…அடிபட்ட கையுடன் நிவாரணப்பணி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், அடிப்பட்ட கையோடு நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் நடிகை அமலா பாலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளா மாநிலம் வரலாறு காணாத கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து கேராளவிற்கு உதவிக்கரங்கள் நீண்டுள்ளது. மேலும் கேரள திரையுலகினரும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால், உடைந்த கையோடு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!