அமலா பால் வித்தியாசமாக துணிச்சலுடன்…

மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் தற்போது இயக்கி வரும் படம் ஆடை. இதில் ஹீரோ கிடையாது. ஹீரோயினை சுற்றி நடக்கிற கதை. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அமலாபால் உடல் முழுக்க சிறிய ரக துணியை சுற்றிக் கொண்டு இரும்பு ராடை ஊன்றியபடி ரத்தம் வழிந்தோட கண்கலங்க நின்ற கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அமலா பால் வித்தியாசமாக துணிச்சலுடன் நடிக்கிறார் என்ற பாராட்டும். அரைகுறை உடையுடன் கவர்ச்சி காட்டுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.

இதுகுறித்து அமலாபால் கூறியிருப்பதாவது : ஆடை படம் எனது கேரக்டரில் முக்கியமான படம். காமினி என்ற பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறேன். இது வழக்கமான படமாக இருக்காது. கதையும், கதை சொல்லும் விதமும் புதுமையாக இருக்கும். எனது கேரக்டரைச் சுற்றி கதை நடக்கும். பர்ஸ்ட்லுக் பார்த்து விட்டு விமர்சிப்பவர்கள் படத்தை பார்க்கும்போது பாராட்டுவார்கள். அந்த உடையுடன் நான் ஏன் அப்படி தோற்றமளிக்கிறேன் என்பது படம் பார்க்கும்போது தெரியும். என்கிறார் அமலாபால்.

Sharing is caring!