அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான் முதன்முதலாக இணைகின்றனர்

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டமான சரித்திரப் படம் தான் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். இந்த படத்திற்காக அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன்முதலாக ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர்,இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஒரு முக்கிய படம் .இந்த படத்தின் வாஸ் மாலே ( VASH MALLE ) என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலுக்கு நடனக்கலை பணியை பிரபுதேவா மேற்கொண்டார். பிரபுதேவா ஒரு சிறப்பான நடன கலைஞர். இந்த பாடலுக்கு சிறப்பான முறையில் நடனக்கலையை மேற்கொண்டுள்ளார். அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான் இணைந்து ஆடிய இந்த பாடல் பல காலத்திற்கு நின்று பேசும்..

பாலிவுட்டின் முக்கிய உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன்முதலாக இந்த படத்தில் இணைந்துள்ளனர் .இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளனர். இவர்கள் ஆடிய இந்த நடனக் கலை வீடியோ தற்போது தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தில் இடம் பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என இயக்குனர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

Sharing is caring!