அமெரிக்காவில் பட்டையை கிளப்பும் பேட்ட வசூல்

சென்னை:
பேட்ட படம் அமெரிக்காவில் பட்டையை கிளப்பி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ப்ரீமியர் மற்றும் முதல் நாளே 1 மில்லியன் டாலர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை அரை மில்லியன் டாலர் வசூலை பேட்ட கடந்துள்ளது.

மேலும் ரஜினியின் ப்ரீமியரில் டாப்-3ல் பேட்ட இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!