அம்மன் கோவில் கட்டியுள்ள டேனியல் பாலாஜி

சென்னை:
நடிப்பது வில்லன் வேடமாக இருந்தாலும் டேனியல் பாலாஜி செய்து வரும் காரியம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் டேனியல் பாலாஜி. காக்க காக்க, காதல் கொண்டேன், வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, மாயவன், பைரவா என பல படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றுள்ளார்.

இவர் படங்களில் நடிப்பது தாண்டி சென்னை ஆவடியில் ஒரு அம்மன் கோவில் கட்டுகிறார். அக்கோவிலின் வேலைகள் முடியும் நிலையில் உள்ளதாம். வரும் 13ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறதாம். அதற்கு அனைவரையும் அழைக்கிறேன் என கோவில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார் டேனியல் பாலாஜி.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!