அம்மா வேடங்களை நானாக விரும்பி ஏற்பதில்லை

காக்கா முட்டை படத்தில், இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து, ஆறாது சினம் மற்றும் லட்சுமி ஆகிய படங்களிலும் அம்மா வேடங்களில் நடித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘அம்மா வேடங்களை நானாக விரும்பி ஏற்பதில்லை. அந்த மாதிரி வேடங்கள் என்னை இயல்பாக காண்பித்து விட்டன.

அதோடு, சில படங்களில் கதையில் ஐக்கியமாகி நடிப்பதால், என்னை ஒரு அம்மாவாகவே உணர்கிறேன். அவ்வகையில் திருமணமாகாமலேயே அம்மாவாகி விட்டது போன்ற உணர்வை, சில படங்கள் கொடுத்து விட்டன…’ என்கிறார். தாருக்கும் அகப்படாமல், தாழ்பாளுக்கும் அகப்படாமல்!

Sharing is caring!