அரசியலுக்கு வருமாறுக் கூறி வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்- ரஜினிகாந்த் வேண்டுகோள்

அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி தன்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியலுக்கு வரக்கோரி சென்னையில் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில், “நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம். அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.

நான் அரசியலுக்கு வராததை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிலர் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். நான் ஏன் அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கி உள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!