அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி… நடிகை ரெஜினா சொல்றார்

சென்னை:
அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார் நடிகை ரெஜினா.

சதுரங்க வேட்டை -2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார்.

இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத்துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!