அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளபார்ட் படத்தில் சஸ்பென்ஸ் ரோலில் சாயா சிங்

திருடா திருடி படத்தில் தனுசுடன் நடித்து பிரபலமானவர் சாயா சிங். அந்த படத்தில் மன்மதராசா பாடலுக்கு அதிரடி நடனமாடியவர். சில படங்களில் நடித்தவர், நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

சமீபகாலமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான உள் குத்து, இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினப்பாக்கம், பவர்பாண்டி படங்களில் நடித்தவர், அடுத்தப்படியாக அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளபார்ட் படத்தில் சஸ்பென்ஸ் ரோலில் நடிக்கிறார்.

மொத்தம் ஐந்து நாட்கள் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவரது கதாபாத்திரம் கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சஸ்பென்ஸ் ரோலாம். அதனால் சாயாசிங் நடிக்கும் கேரக்டர் பற்றி வெளியில் கசியவிடாமல் சஸ்பென்சாக வைக்குமாறு அவரை கேட்டுக் கொண்டுள்ளார்களாம்

Sharing is caring!