அரவிந்த் சாமியுடன் ஜோடி சேர்ந்தது எப்படி?

அறம் படத்தில், தன் நடிப்புக்காக தமிழ் ரசிகர்கள் பாராட்டி தள்ளியதால், உச்சி குளிர்ந்து போயுள்ளார், நயன்தாரா. இந்த ரசிகர் பட்டாளத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார், அவர்.

சமீபத்தில் புத்தாண்டையொட்டி, சமூக வலைதளத்தில், தன் ரசிகர்களுக்காக, கைப்பட எழுதிய வாழ்த்து கடிதத்தை வெளியிட்டிருந்தார். அதில், ‘என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், அழகாகவும் மாற்றி அமைத்தது, உங்களைப் போன்ற ரசிகர்களின் அன்பு தான். உங்களின் அன்பும், ஆசிர்வாதமும் தான், என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்’ என, வரிக்கு வரி, உருக்கமாக எழுதி உள்ளார்.

இரண்டு பக்கங்கள் அடங்கிய இந்த கடிதம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. எந்தாண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு நயன்தாரா, தன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது, கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sharing is caring!