அருண்விஜயை இயக்கவிருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ இயக்குனர்?

‘துருவங்கள் பதினாறு’ மற்றும் அரவிந்த் சுவாமியின் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண்விஜய் நடிக்க‌ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபாஸுடன் இணைந்து ‘சாஹோ’திரைப்படத்திலும், விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘அக்னி சிறகுகள்’படத்திலும், நடித்துவரும் அருண்விஜய், தற்போது விவேக் இயக்கத்தில், ‘பாக்ஸர்’ எனும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் நாயகியாக‌ ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங் முக்கியவேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், அருண் விஜயின் அடுத்த படத்தை துருவங்கள் பதினாறு’ இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Sharing is caring!