அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகியாக பனிதா….

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் ரிலீசை நெருங்கி பின்னர் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் உருவாகும் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் செய்வது என தயாரிப்பு நிறுவனமான E4 Entertainment நிறுவனம் முடிவு செய்து இயக்குனர் பாலாவிடம் ஒப்படைத்தது. விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக வைத்து பாலாவும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். கடந்த 4 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், வேறு இயக்குநர் மற்றும் வேறு நடிகர்களுடன் படப்பிடிப்பை மீண்டும் புதிதாக நடத்தவுள்ளதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் புதிதாக உருவாக இருக்கும் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியா பனிதா சந்து நடிக்க இருக்கிறார். இவர் பாலிவுட்டில் வெளியான அக்டோபர் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!