அர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் நாயகன்..!

ஹாலிவுட் நடிகர்களில் நாம் மறக்க முடியாத ஒரு நடிகர் என்றால் அர்னால்ட் .தனது வலிமையான உடல் அமைப்பை வைத்து சினிமாவினுள் நுழைந்தார் இவர் நடித்த கமாண்டோ,டெர்மினேட்டர் சினிமாவினுள் பட வரிசைகளை நம்மால் மறக்கவே முடியாது. ஒரு காலகட்டத்தில் பாடி பில்டிங் துறையில் இருந்த இவர் பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கினார். இவர் சினிமாவில் நடிக்க துவங்கிய போது இவரின் உடலுக்கு மட்டுமே பல ரசிகர்கள் கிடைத்தனர். தொடந்து வலிமையான ஆக்க்ஷன் ஹீரோ கதைகளிலேயே நடித்து வந்தார். பின்னர் அமெரிக்கா களிபோர்னியா மாநிலத்தின் கவர்னராக பதிவே ஏற்றார்.

தற்போது 70 வயதாகும் அர்னோல்ட் சில மாதங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகச்சை நடந்துள்ளது.மேலும் படங்களில் தென்படாத அர்னால்ட் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டர் என்று அவரது ரசிகர்கர்ள் கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில் அர்னால்டின் மகள் அவெஞ்சர்ஸ் பட புகழ் கிறிஸ் பார்ட்டை திருமணம் முடித்துள்ளார். கிறிஸ் பார்ட் மார்வெல் ஸ்டுடியோஸின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ திரைப்படத்தில் நடித்தவர் ஆவார். சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். ஜுராசிக் வேர்ல்டு திரைப்படத்தின் மூலம் பிரபலமான கிறிஸ், அர்னால்டின் மகள் கேத்ரினை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே கிறிஸ் பார்ட் திருமணமாகி விவாகரத்தான பிராட்டுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது திருமணமாக அர்னால்டின் மகளை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்னால்டுக்கு 24 வயதில் பேட்ரிக் என்ற மகன் உள்ளார். அவர் மிட்நைட் சன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஸ்டெப் அப், lxd போன்ற படங்களை இயக்கிய ஸ்காட் ஸ்பியர் இந்த படத்தை இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!