அறவழியில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்… கமல் சொல்கிறார்

சென்னை:
நாங்கள் அறவழியில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று கமல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் முடிந்த நிலையில், அவர்கள் ரயில் மூலம் சென்னை திரும்பினர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், அவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:

விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகளை அரசு சரியாக செய்யவில்லை என கூறுவதை எதிர்க்கட்சிகளின் குரலாக பார்க்கக்கூடாது. மக்களின் குரலாக பார்க்க வேண்டும். நாங்கள் அறவழியில் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு கமல் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!