அலிபாபாவும் 40 குழந்தைகளும்

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் அடுத்து இயக்கும் படம் அலிபாபாவும் 40 குழந்தைகளும். இது 40 குழந்தைகளை மையமாக கொண்ட காமெடிப்படம். குழந்தைகளுடன் அப்புக்குட்டி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி நடிக்கிறார்கள். சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய்குமார் இசை அமைக்கிறார். இடியேட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் போஸ் தயாரிக்கிறார். படம் பற்றி எல்.ஜி.ரவிச்சந்தர் கூறியதாவது:

நான் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதையம்சம் கொண்டவை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். உழைப்பே உயர்வு உழைக்காமல் எவராலும் முன்னேற முடியாது என்ற உலகம் அறிந்த உண்மை தத்துவமே இந்த படத்தின் திரைக்கதை.

குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கிறார்கள் இவர்களுடன் பஸ் ஒன்று முக்கிய கதாப்பாத்திரமாக வர இருக்கிறது. படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற உள்ளது. என்றார் ரவிச்சந்தர்.

Sharing is caring!