அலை சறுக்கு விளையாட்டு… அமலாபால் வெளியிட்ட படம் வைரல்

சென்னை:
பீச்சில் அலை சறுக்கு விளையாட்டை கற்று வரும் அமலாபால், அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த படம் செம வைரலாகி வருகிறது.

அமலாபால் நடிப்பில் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஆடை என்ற படத்திலும் அமலாபால் நடித்து வருகிறார்.

நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.

தற்போது பீச்சில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பீச்சில் அலை சறுக்கு விளையாட்டை கற்று வரும் அமலாபால், அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!