அல்லு அர்ஜூன், இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி

நா பேரு சூர்யா படத்தை அடுத்து அல்லு அர்ஜூன், இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்தப்படத்தில் அல்லது அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.. இவர்கள் இருவரும் ஏற்கனவே சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் தான்..

அதுமட்டுமல்ல, நாகார்ஜூனா குடும்பத்து மருமகளாக சமந்தா மாறுவதற்கு காரணமாக அமைந்த மனம் படத்தை இயக்கிய விக்ரம் குமார், அடுத்தாதாக சூர்யா நடித்த 24 படத்திலும் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். தற்போது மூன்றாவது முறையாகவும் அவரை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளாராம் விக்ரம் கே குமார்.

Sharing is caring!