அள்ளு… அள்ளுன்னு அள்ளியுள்ளது கேஜிஎப் படம்…! செம மாஸ் வசூல்

சென்னை:
அள்ளு… அள்ளுன்னு அள்ளியுள்ளது கேஜிஎப் படத்தின் வசூல் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேஜிஎப் கர்நாடகாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம். இப்படத்தின் மீது
ரசிகர்களுக்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
படமும் எதிர்பார்த்தது கலக்கலாக இருக்க இப்படம் வசூல் சாதனை செய்து வருகிறது.

3 நாட்களில் கேஜிஎப் உலகம் முழுவதும் ரூ.54 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம். கர்நாடகா சினிமாவில் ஒரு படம் ரூ 50 கோடி வசூல் செய்தாலே அது வரலாற்று சாதனை தான். அப்படியிருக்க இப்படம் 3 நாட்களில் ரூ.54 கோடி என்பது கண்டிப்பாக இது கன்னட சினிமாவிற்கு ஒரு பாகுபலி தான்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!