அவரது அனுபவத்தை ‘OMG’ என்று வியந்து பாராட்டியிருக்கிறார்

ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலரது நடிப்பில் 550 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களில் இல்லாத அளவிற்கு இடம் பெற்றுள்ளது.

இப்படத்திற்கான பின்னணி இசையை ஏஆர் ரகுமான் முடித்து இப்போது மிக்சிங் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்காகப் படத்தைப் பார்க்கும் ரஹ்மான் படத்தைப் பற்றிய அவரது அனுபவத்தை ‘OMG’ என்று வியந்து பாராட்டியிருக்கிறார்.

“6வது ரீலை மிக்சிங் செய்து கொண்டிருக்கிறேன். ‘OMG’, எமோஷனல் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் வரலாறு’ என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ‘2.0’ படம் வெறும் கிராபிக்ஸ் மிரட்டலாக மட்டுமல்லாமல் எமோஷனலாகவும் இருக்கும் என்று தெரிய வருகிறது.

Sharing is caring!