அவர் என் மருமகள் இல்லை… மகள்… தாடி பாலாஜியின் அம்மா பேச்சு

சென்னை:
அவர் என் மருமகள் இல்லை… மகள் என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் நடிகர் தாடி பாலாஜியின் அம்மா.

நடிகர் பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் இடையே இருந்த குடும்பத்தகராறு ஏற்பட்டு கோர்ட் வரை சென்றது. பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக சென்ற அவர்கள் ஒருவழியாக சமரசம் ஆனார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு பாலாஜியின் அம்மாவும் வந்திருந்தார். அவர் பேசும்போது “பாலாஜி-நித்யா சண்டை அவர்கள் பர்சனல் விஷயம். நான் எதுவும் தலையிடமாட்டேன். நித்யாவை நான் மருமகளாக நினைக்கவில்லை.. மகள். எனக்கு ஒரு மகன்-ஒரு மகள்” என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!