அவர் போல் என்னால் நடிக்க முடியாதுங்க… சிவகார்த்தி புகழாரம்

சென்னை:
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் போல் என்னால் நடிக்க முடியாது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சீமராஜா இவருக்கும் பெரும் தோல்வியை கொடுத்தது. தோல்விப்படமாக இருந்தாலும் தமிழகத்திலேயே இப்படம் ரூ.48 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்சேதுபதியின் 25வது படத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்தனர். இதில் கலந்துக்கொண்ட சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், என்னால் விஜய் சேதுபதி போல் நடிக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!