ஆக்சன்பொலீஸ் வேடத்தில் ரவி

ஜெயம்ரவி நடித்து கடைசியாக வெளியான படம் டிக் டிக் டிக். சக்தி செளந்திரராஜன் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது கார்த்திக் என்ற அறிமுக இயக்குனரின் அடங்க மறு படத்தில் நடிக்கிறார் ஜெயம்ரவி.

மேலும், தனி ஒருவன், போகன் படங்களுக்குப்பிறகு இந்த படத்திலும் போலீசாக நடிக்கும் ஜெயம்ரவி அதிரடியான ஆக்சன் காட்சிகளிலும் நடிக்கிறார். அதனால் இந்த படத்திற்காக கணிசமான அளவு வெயிட் குறைத்துள்ளார் ஜெயம்ரவி. மேலும், இந்த படத்தில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவின் 18 வயது மகன் கெவின் ஸ்டன்ட் மாஸ்டராக அறிமுகமாகிறார்.

Sharing is caring!