ஆக்சன், திரில்லர் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி

சென்னை:
வரிசையாக படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் அடுத்த படம் ஆக்சன். திரில்லர் என்று தெரிய வந்துள்ளது.

விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜூங்கா இவ்வாரம் வெளியாகவுள்ளது.

அவர் தற்போது பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிரார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது.

தொடர்ந்து படக்குழுவுடன் அவர் மலேசியா செல்லவுள்ளாராம். அங்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது. இதில் அவரின் மகன் சூர்யாவும் நடிக்கவுள்ளதால் உடன் அவரும் சென்றுள்ளாராம்.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படம் தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது. யுவன் இசையமைக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறாராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!