ஆசையாக வளர்த்த மகளுக்கு இன்று நடைபெற்ற கொண்டாட்டம்… மகிழ்ச்சியில் நடிகர் சூரி!

வீட்டில் பொழுதை கழித்து வரும் சூரி இன்று தனது செல்ல மகளின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறிவந்திருந்தார்.

பலருக்கும் உதவி செய்து வரும் சூரி, இன்று தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார். சூரியின் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

Sharing is caring!