‘ஆடை’யை அடுத்து அமலாபால் நடிக்கும் அடுத்த படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்

அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றாலும் அந்த படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இந்த படம் ஓரளவு திருப்திகரமாக வசூலைப் பெற்ற நிலையில் தற்போது அமலாபால் நடித்த அடுத்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது

அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து, தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் சாந்தகுமார் ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஆர் வினோத் என்பவர் இயக்கியுள்ளார்

Sharing is caring!