ஆண் எப்பொழுது அடிமையாகிறான்….விஜய் சேதுபதி

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி, ஆண்,  பெண்  உறவின் நெருக்கத்தை  ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் சுட்டிக் காட்டுவதாகவும், “ஒரு பெண்ணின் பேரன்பை எப்பொழுது ஒரு ஆண் உணர்கிறானோ அப்பொழுதே, அவன் அந்த பெண்ணின் அடிமையாகிறான்” என்கிற கருத்தை இந்த படம் ஆழமாக சொல்லியுள்ளதாக பேசியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண்  நடித்துள்ள  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை ,  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத்  ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. மேலும் கடந்த மார்ச் 15ஆம் தேதி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  திரையிடப்பட்டுள்ளது.

Sharing is caring!