ஆண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் சென்ட்ராயன்.

சென்னை:
ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார் நடிகர் சென்ட்ராயன்.

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் நடித்து பின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு பலரது கவனத்தை பெற்றவர் நடிகர் சென்ட்ராயன். தற்போது இவர் ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெகுளித்தனமான தன்மையால் மக்களிடம் மிகவும் பரிட்சயமானவராக மாறினார் சென்ட்ராயன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி என்பவரை சென்ட்ராயன் காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.

ஆனால் அவா்களுக்கு சிறிது காலம் குழந்தை இல்லாமல் இருந்தது.
சென்ட்ராயன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவரது மனைவி கா்ப்பம் அடைந்திருந்தாா். பின்னா் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினா் கா்ப்பம் குறித்து எடுத்துக் கூறியதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்து பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!