ஆதரவாக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்கள் குரல்வளையை நெறிக்க வேண்டாம்

பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் மீ டூ விவகாரம் சூடு பிடிப்பதற்கு முன்பே மலையாள திரையுலகில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை அந்த சம்பவத்துக்கு நீதிகேட்டு மலையாள சினிமா நடிகைகள் சிலர், சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை துவக்கி, பாதிக்கப்பட்ட நடிகைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

இந்த விஷயம் காரணமாக அவர்கள் தவிர்க்க முடியாமல் முன்னணி நடிகர்களான மம்முட்டியையும், மோகன்லாலையும் எதிர்த்து கருத்து சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் மோகன்லால், மம்முட்டி இருவரது ரசிகர்களும் இதனை விரும்பவில்லை. அதனால் இந்த பெண்கள் நல அமைப்பை சேர்ந்த ரேவதி, பத்மபிரியா, பார்வதி போன்ற நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் கடும் கண்டனங்களையும், அர்ச்சனைகளையும் அள்ளித்தெளித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகை பத்மபிரியா கூறும்பொது, “சமீபகாலமாகத் தான் எங்கள் பிரச்சனயை கூற தைரியமாக முன் வந்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்கள் குரல்வளையை நெறிக்க வேண்டாம் தயவு செய்து பிரச்சனை என்னவென்று எங்களுடன் சேர்த்து காது கொடுத்து கேளுங்கள். தயவு செய்து எங்களுக்கு குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை எங்கள் பிரச்சனை என்னவென்றாவது காது கொடுத்து கேளுங்கள் அது போதும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sharing is caring!