ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படம் டப்பிங் மம்முட்டி

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படம் யாத்ரா என்ற பெயரில் தயாராகியிருக்கிறது. ராஜ சேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். மகி வி.ராகவ் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டிரைலர் வெளியான நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் டிரைலரில் சொந்த குரலிலேயே தெலுங்கில் டப்பிங் பேசியிருந்தார் மம்முட்டி. அது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து நேற்று முதல் யாத்ரா படத்தில் தான் நடித்துள்ள ஒய்.எஸ்.ஆரின் வேடத்திற்காக டப்பிங் பேசி வருகிறார் மம்முட்டி.

Sharing is caring!