ஆனந்தி பாடல் வீடியோ வெளியீடு

தனுசும் – யுவன் சங்கர் ராஜாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த படம் மாரி-2. பாலாஜிமோகன் இயக்கிய இந்த படத்தில் தனுசுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டு 18 நாட்களில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை செய்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது மாரி-2 படத்தில் இளையராஜா பாடிய, ஆனந்தி பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப்படாலுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியான 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே 10 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது.

Sharing is caring!